இலங்கை பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்த மூன்றாண்டு கோரிக்கை....
ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
அதனையடுத்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கடந்த பெப்ரவரி மாதம் இந்தியாவிற்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்ததுடன், இதன்போது கடனை திருப்பி செலுத்துவதற்கு நிவாரணம் கோரியிருந்தார்.
இலங்கை பெற்றுள்ள கடனை திருப்பி செலுத்துவதனை மூன்றாண்டுகளுக்கு பிற்போடுமாறு இந்திய அரசிடம் இலங்கை கோரியுள்ளதென பிரதமர் இந்து பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார்.
இதேவேளை இலங்கை இரண்டு சந்தர்ப்பங்களில் உடனடி கடனுதவி கோரியுள்ளது.....
இந்தக் கோரிக்கைக்கு இந்தியா பதிலளித்ததா?
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைக்கு மத்தியில் கடனை திருப்பி செலுத்துவதனை பிற்போடும் படி இந்தியாவிடம் இலங்கை முன்வைத்த கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வருவதாக இந்து பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விடயங்கள் தொடர்பாக ஆலோசிப்பதற்கு திட்டமிட்டிருந்தாலும் இலங்கை அதற்குப் பதிலளிக்கவில்லை என்றும் இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது....
இந்திய உயர்ஸ்தானிகரிடம் இது தொடர்பாக நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.
கடனை செலுத்தும் கால எல்லை மற்றும் உடனடி கடனுதவி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்...
இந்த விடயங்கள் தொடர்பாக உயர் மட்டத்தில் கலந்தாலோசித்து வருவதாக உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்தது...
இது தொடர்பாக உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்றும் இன்றும் ஆராயப்பட்டுள்ளது...

No comments:
Post a Comment