மின்னல் வேகத்தில் செயற்பட வேண்டும் - தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி தலைவர் பணிப்பு..
இன்று மன்னார் பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி சார்பாக தேர்தல் பரப்புரை இடம்பெற்றது.
இப் பரப்புரை செயற்பாட்டில் தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சி தலைவர் திரு. மனோ. ஐங்கர சர்மா அவர்கள் கலந்துகொண்டு கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
அவர் தனது உரையில் தமிழ்த்தேசிய சைவ மக்கள் கட்சியின் வெற்றி காலத்தின் முதன்மை தேவையாக உள்ளதை மக்கள் அனைவரும் உணர்ந்து செயற்பட்டு வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும், எமது கட்சித் தொண்டர்கள் தேர்தல் பரப்புரை பணிகளின் போது ஏனையவரைப் போன்று வீதிகளில் விபத்துக்களுக்கு காரணமான வகையிலும், மதில்களை அசிங்கப்படுத்தும் வகையிலும் கட்சி சின்னங்களையும் இலக்கங்களையும் இடாது மக்களின் மனங்களில் "கோடாரி" சின்னத்தை பதித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
எமது கட்சித் தொண்டர்கள் எப்போதும் அர்ப்பணிபபுடன் செயற்பட வேண்டும் என்பதே எனதும், கட்சியினதும் எதிர்பார்பாகும் எனவும் தெரிவித்தார்.
நூதனமாக பல வழிகளில் மக்களைக் குழப்பும் கைங்கரியங்களில் பலர் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருப்பதாகவும் இருந்தபோதும் கொள்கையால் ஒன்றுபட்டுள்ள சைவத் தமிழ் மக்களை யாரும் குழப்பிவிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்...
மின்னல் வேகத்தில் செயற்பட வேண்டும் - தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சி தலைவர் பணிப்பு..
Reviewed by Author
on
July 13, 2020
Rating:

No comments:
Post a Comment