அன்பான பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே !! இது உங்களுக்காக .........
எவ்வளவோ துயரங்களில் இருந்து உயிரை பாதுகாக்கவும் உழைத்து உறவுகளை பாதுகாக்கவும் புலம் பெயர்ந்த எம் உறவுகள் மன அழுத்தத்தினாலோ அன்றி வேறு எந்த காரணங்களாலோ தமதும் தமது குழந்தைகளினதும் உயிர்களை காவு கொடுக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அன்பானவர்களே!
எந்த பிரச்சினைக்கும் மரணம் அல்லது கொலை தீர்வாக அமையாது.
உங்கள் பிரச்சினைகளை அணுகி ஆலோசனை வழங்கி உதவ Tamil Helpline தயாராக உள்ளது;;
தயவு செய்து அவர்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் புரச்சினைகளை தெரிவித்து உதவி பெறுங்கள். வாழ்க்கை என்பது பாதி வழியில் முடித்து கொள்வதற்கானது அல்ல. அது வாழ்ந்து முடிப்பதற்கானது.
தயவு செய்து இந்த செய்தியினை முடிந்தவரை அனைத்து உறவுகள் மற்றும் நண்பர்களுக்கு பகிருங்கள்.
தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள். எமது சமூகத்தில் இவ்வாறான மனதை உலுக்கும் துயர சம்பவங்கள் இனி எந்த காலத்திலும் இடம் பெறாது இருக்க அனைவரும் சமூக பொறுப்புடன் செயற்படுவோம்.
Tamils Help Line - தமிழர்களுக்கான உதவிச் சேவை.
எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் எழும் எந்த விதமான சவால்களுக்கும் உங்களுக்கு உடன் உதவி செய்வதற்கென்றே இந்த தகுதி வாய்ந்த குழு(Tamil Charity) இயங்குகிறது.
தமிழிலேயே பேசி உங்களுக்கு இலவசமாகவே உதவுவார்கள். இந்தக் குழுவில் வைத்தியர்கள்(GP), சட்டத்தரணிகள்(Solicitors), நிதியியல் ஆலோசகர்கள்(Financial Advisers), கணக்காளர்கள்(Accountants), மனநல மருத்துவர்கள்(Psychiatrists), சமூக சேவையாளர்கள்(Social Workers) என பலதரப்பட்ட சேவையாளர்கள் உங்களுக்கு உதவக் காத்துள்ளார்கள்.
இந்தத் தகவலை உங்கள் உறவுகளுடனும் பகிருங்கள். நீங்களும் பயன்பெற்று உங்கள் உறவுகளையும் காத்திடுங்கள்.
தொடர்புகள்:
தொலைபேசி:
0203 500 1573,
07525 050 010
இணையம்
அன்பான பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே !! இது உங்களுக்காக .........
Reviewed by Author
on
July 03, 2020
Rating:

No comments:
Post a Comment