அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா.....
ரஷ்யா சமீபத்தில் விண்வெளியில் செயற்கைக் கோள்களை அழிக்கும் எதிர்ப்பு ஆயுதங்களை பரிசோதித்ததாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது குற்றஞ்சாட்டின.
இக் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறப்பானது என ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஜூலை 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் ஏனைய விண்கலங்களுக்கு அச்சுறுத்தலை உருவாக்கவில்லை எனவும் சர்வதேச சட்டத்தை மீறவில்லை எனவும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்ய விண்வெளி உபகரணங்கள் குறித்து சோதனை செய்ய புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அந்நாடு முன்னர் அறிவித்திருந்தது.
எனினும், அமெரிக்காவும் பிரித்தானியாவும்
ரஷ்யாவின் இந்த தொழில்நுட்பம் விண்ணில் சுற்று வட்டப்பாதையில் இருக்கும்
செயற்கைக் கோள்களை இலக்கு வைக்கும்படியான ஏவுகணை போன்ற ஆயுதம் ஒன்றே என
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது......
அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் குற்றச்சாட்டை மறுத்த ரஷ்யா.....
Reviewed by Author
on
July 25, 2020
Rating:

No comments:
Post a Comment