அண்மைய செய்திகள்

recent
-

நிதி மோசடி காரணமாக மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை.......

பல மில்லியன் டொலர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக்கிற்கு 12ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மலேசிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிராக முதற்கட்டத்தில் 7 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்த வழக்கு விசாரணை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

குறித்த குற்றச்சாட்டுகளுக்கான அனைத்துஆதாரங்களும் முழுமையாக பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டதாகவும் அவையனைத்தும்
சந்கேத்திற்கிடமின்றி நிரூபணமாகியுள்ளதாக நீதிபதி இதன்போது
அறிவித்துள்ளார்...

எனினும் நம்பிக்கை துரோகம், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் பணச்சலவை ஆகிய குற்றங்கங்களில் அவர் குற்றமற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

மேலும் அவர் மீதான வழக்கு மலேசியாவின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளின் முதல் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது....

மலேசிய அபிவிருத்தி சபையின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதிகளவு சொத்துக் குவித்ததாகவும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தொடரப்பட்டிருந்தது...


அத்தோடு, அரசாங்க நிதி மோசடி தொடர்பாகஅவரிடம் சுமார் 16 மாதங்களுக்கு முன்பு விசாரணை ஆரம்பமாகிய நிலையில் இன்றையதினம் நீதிமன்றம் தீர்ப்பை அறிவித்துள்ளது. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காக அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதில் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் மற்றும் நம்பிக்கை மீறல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக 10 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது...



நிதி மோசடி காரணமாக மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை....... Reviewed by Author on July 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.