ஹாங்காங்கில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மீது கொரோனா கால நடவடிக்கை
ஹாங்காங்: சமூக இடைவெளியை மீறியதாக வெளிநாடுகளைச் சேர்ந்த 14 வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ஹாங்காங் காவல்துறை 2 ஆயிரம் ஹாங்காங் டாலர்களை(சுமார் 20 ஆயிரம் இந்திய ரூபாய்) அபராதமாக விதித்துள்ளது.
ஹாங்காங் காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், Central மற்றும் Tseung Kwan O பகுதிகளில் 2 நபருக்கு மேல் கூட்டமாக கூடியிருந்ததாக உள்ளூர்வாசிகள் அல்லாத 14 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில், குறைந்த சம்பளத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் நியாயமற்றது என்றும் அதே பகுதிகளில் கூட்டமாக கூடியிருந்தவர்கள் மீது இப்படியான அபராதம் விதிக்கப்படவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் வீட்டு வேலைச் செய்யும் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 4,630 ஹாங்காங் டாலர்கள் சம்பாதிக்கும் நிலையில், 2000 டாலர்கள் அபராதம் என்பது அவர்களது சம்பளத்தில் குறிப்பிடத்தகுந்த ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று சூழலில், வீட்டு வேலைச் செய்யும் தொழிலாளர்கள் முதலாளிகள், பொதுச் சமூகம் என இரண்டு பக்கமும் பாகுப்பாட்டை எதிர்கொள்வதாகக் கூறுகிறது ஆசிய வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கான சங்கங்களின் ஹாங்காங் கூட்டமைப்பு.
இதுவரை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 60 வீட்டு வேலைச் செய்யும் தொழிலாளர்களுக்கும் தொற்று வேலை செய்யும் இடத்திலிருந்து பரவியிருக்கிறது. எந்த தொற்றும் ஒன்றுக்கூடலில் நிகழவில்லை எனக் கூறப்படுகின்றது.

No comments:
Post a Comment