சஹ்ரான் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு உரிய தலைமைத்துவம் இல்லாமல் போனது...
மனித படுகொலை ஒன்றுக்கு திட்டம் தீட்டியமை தொடர்பில் தம்மை கைது
செய்தமையானது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் ஹசீமை கைது செய்வதற்கு தடையாக அமைந்தாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (13) மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த அவர், தம்மை கைது செய்ததன் மூலம் சஹ்ரான் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு உரிய தலைமைத்துவமும் வழிகாட்டுதலும் இல்லாமல் போனதாக தெரிவித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் அவரிடம், பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய போது சஹ்ரான் ஹசீம் ஒழிந்திருந்த இடம் தொடர்பில் அறிந்திருந்தீர்களா? என வினவினர்.
இதற்கு பதிலளித்த நாலக டி சில்வா, பயங்கரவாத விசாரணை பிரிவு சஹ்ரான் ஹசீமை கைது செய்ய கொழும்பு பிரதம நீதவானிடம் பிடியாணை ஒன்றை பெற்றுக் கொண்டதன் பின்னர், சந்தேக நபர் கெகுனுகொல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தாகவும் அதன்படி அவரை கைது செய்ய அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்போது சஹ்ரான் ஹசீமை ஏன் 2017 முதல் 2018 வரை கைது செய்ய முடியவில்லை என ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் வினவினர்.
அதற்கு பதிலளித்த அவர், தனது கட்டுப்பாட்டில் இருந்த குற்றப் புலனாய்வுப்
பிரிவுக்கு கிடைத்த பிடியாணை உத்தரவிற்கு அமைய சஹ்ரான் ஹசிமை கைது செய்ய பலவழிகளில் முயன்றும் அவர் தங்கியிருந்த இடம் குறித்த உறுதியான தகவல் கிடைக்காதால் அவரைக் கண்டுபிடிக்க முடியாது போனதாகவும் அவர் தெரிவித்தார்.
பிடியாணை பெறப்பட்ட போது சஹ்ரான் வெளிநாட்டில் இருந்தாக சில தகவல்கள் கிடைத்தாகவும், அதன்படி அவர் கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்லவில்லை என்பது குறித்து கண்டறியப்பட்டதாகவும் நலக்க சில்வா தெரிவித்தார்.
இதன்போது, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சமில் பெரேரா, சாட்சியை கைது செய்வது அந்த நேரத்தில் சஹ்ரானை கைது செய்தால் விசாரணையை பாதித்ததா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நாலக டி சில்வா, சஹ்ரானை கைது செய்ய பின் தொடர்ந்தாகவும்,அப்படி அவர் கைது செய்யப்பட்டதன் மூலம் அவரது திட்டங்கள் முறியடிக்கப்பட்டதாகவும் மேலும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..

No comments:
Post a Comment