அமைச்சுக்களில் புதிய செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன...
புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களில் மேலும் 3 அமைச்சுக்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த கடிதங்கள் வழங்கப்பட்டன.
அதற்கமைய செயலாளராக நிமிக்கப்பட்டுள்ளவர்களின் விபரம்..
நீதி அமைச்சின் செயலாளராக எம்.எம்.பி.கே. மாயாதுன்னே,
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் செயலாளராக யு.டி.சி. ஜயலால்
புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர். கபில குணவர்தன
ஆகியோருக்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment