அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்.(Photos)

மன்னார் மாவட்டதில் கொரோனா அச்சுறுத்தலின் பின்னர் பாடசாலை மாணவர்கள் இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய் கிழமை (25) காலை 10.30 மணியளவல் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.


மாவட்ட ரீதியில் சிறுவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும், குறிப்பாக கொரோனா காலப்பகுதில் முழுமையாக முடக்கப்பட்டிருந்த நிலையில்  உடல் உள ரீதியாக எதிர் கொண்ட பிரச்சினைகள் , பாடசாலை மற்றும் கிராம மட்டத்தில் எதிர் கொள்வதற்கான தயார் படுத்தலை ஏற்படுத்துவதற்கு என குறித்த கூட்டமானது இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், பொலிஸார் ,சிறுவர் நன்னடத்தை உத்தியோகஸ்தர்கள் ,மருத்துவ அதிகாரிகள், வலயகல்வி பணிமனை அதிகாரிகள், சமூக சேவை உத்தியோகஸ்தர்கள் அரச சார்பற்ற நிறுவன அதிகரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கூட்டத்தில்  சுகாதாரம் ,போசனை ,கல்வி ,போதைபொருள் மற்றும் சமூக எதிர்ப்பு நடவடிக்கைகள், சிறுவர் உள பிரச்சினைகள், தற்கொலைகள் ,சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான  அரச சார்பற்ற அமைப்புக்களின் செயற்பாடுகள், தொடர்பான கருத்துக்கள் பரி மாறப்பட்டதுடன் விசேட பொது கலந்துரையாடல் இடம் பெற்றமை குறிப்பிடதக்கது.

மன்னார்   நிருபர்

25-08-2020











மன்னாரில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களின் பாதுகாப்பு தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல்.(Photos) Reviewed by Author on August 25, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.