இதன்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம், அரச புலனாய்வு பிரிவால் அனுப்பி வைக்கப்பட்ட உயிர்த்த தாக்குதல் நடத்தப்பட போவது தொடர்பான தகவல்களை உரிய முறையில் பரிசீலித்தீர்களா? என வினவினார்.
அதற்கு பதிலளித்த அவர், அரச புலனாய்வு சேவையினரால் வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் எந்தவொரு ஆய்வும் இன்றி பொதுவான தகவல்களை மாத்திரம் சிறிய துண்டில் அனுப்பி வைத்தாக கூறினார்.
ஆனப்படியால் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறிய ஹேமசிறி பெர்ணான்டோ, அவ்வாறு தமக்கு தகவல்கள் வழங்கப்படுவது பொறுத்தமற்றது எனவும் மாறாக அவ்வாறான தகவல்களை பொலிஸார், குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கே வழக்க முடியும் எனவும் கூறினார்.
அரச புலனாய்வு பிரிவு நீங்கள் கூறுவது போன்று ஆய்வுக்குட்டுத்தப்பட்ட தகவல்களை வழங்காத நிலையில் ஏன் அது குறித்து ஜனாதிபதியை தெளிவுப்படுத்தவில்லை? என ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு நீதிபதி அவரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர் தனக்கு தொடர்ந்தும் ஆய்வுக்குட்டுத்தப்படுத்தப்படாத தகவல்களே கிடைத்தாகவும், எனினும் அது குறித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெளிவுப்படுத்தவில்லை எனவும் காரணம் அவருக்கு அது தொடர்பில் அறியவோ அல்லது விளங்கப்படுத்தினால் விளங்கிக் கொள்ளவோ போதிய பலம் இருக்கவில்லை என கூறினார்.
அப்படியானால் முன்னாள் ஜனாதிபதியை நீங்கள் குறைத்து மதிப்பிடுகின்றீர்களா? என ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு நீதிபதி அவரிடம் மறுபடியும் வினவினார்.
அப்போது அவர் தான் முன்னாள் ஜனாதிபதியை குறைத்து மதிப்பிடவில்லை எனவும் மாறாக ஒரு உண்மையை சொல்ல ஆசைப்படுகின்றேன். அதாவது ஒரு கூட்டத்தில் நான் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றை முன் வைத்தேன். அப்போது அவரை சுற்றி இருந்தவர்கள் பொய் கூறி அவரை குழப்பி இருந்தனர். அதன் பின்னர் என்னுடன் நேரடி தொடர்பு இருக்கவில்லை.
எனது குடும்பத்தினர் என்னை விலகுமாறு கூறினார். அதற்கமைய நான் விலக இருந்த தருவாயில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றது என்றார்.
அப்போது தாக்குதல் தொடர்பில் கிடைத்த மூல அச்சுறுத்தல் தகவலை ஏன் ஜனாதிபதிக்கு வழங்கவில்லை என அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர், எனக்கு அவர் மேல் நம்பிக்கை கொள்ள முடியாது அந்தளவிற்கு எனக்கும் அவருக்கும் இடையிலான தொடர்பு சுமுகமானதாக இருக்கவில்லை.
அப்போது அரச மேலதிக சொலிசிட்டர் நாயகம் சாட்சியாளரிடம் மீண்டும், நிலந்த ஜயவர்தன ஏப்ரல் 20 ஆம் திகதி உங்களுக்கு அறிவித்தாரா என வினவினார்.
அதற்கு பதில் வழங்கிய அவர், ஆம் நிலந்த அன்று இரவு வட்சப் மூலம் அறிவித்திருந்தார். அதாவது எதிர்வரும் 2 மணித்தியாலங்களில் தாக்குதல் ஒன்று இடம்பெறும் என அவர் அதனூடாக தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த தாம், பொலிஸ்மா அதிபருடன் அது குறித்து பேசுமாறு தெரியப்படுத்தினேன். நானும் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்க அழைப்பெடுத்தேன்.
அப்போது அவர் பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அறிவித்த வண்ணமுள்ளதாக கூறினார்.
அது குறித்து ஏன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவான் விஜேவர்தனவுக்கும் அறிவிக்கவில்லை என ஆணைக்குழுவின் தவிசாளர் அவரிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த அவர், அவர்களுடன் கதைப்பதற்கு மைத்திரிபால சிறிசேன தடை விதித்திருந்தார். அவர்கள் இருவரும் இருக்கும் கலந்துரையாடலுக்கும் செல்ல வேண்டாம் என்றே அவர் கூறியிருந்தார். என பதில் வழங்கினார்.
மைத்திரி செய்ய முற்பட்ட விடயத்தை கூறும் ஹேமசிறி பெர்ணான்டோ.
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment