மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.
1000 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்கள் வழங்கி வைக்கும் செயற்திட்டத்தின் கீழ் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 50 சிறார்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பாலியாறு,இலுப்பக்கடவை,பெரியமடு,கோவில் குளம் ஆகிய கிராமங்களில் உள்ள முன் பள்ளி சிறுவர்களுக்கே குறித்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் இலுப்பக்கடவை பங்குத்தந்தை, ஸானு அறக்கட்டளையின் பிரதி நிதிகள், முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி முககவசங்கள் அணிந்து கலந்து கொண்டிருந்தனர்.
அண்மையில் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள பூமலர்ந்தான் , குஞ்சுகுளம் , மாதாகிராமம் , பெரிய முறிப்பு, தேக்கம் பகுதிகளை சேர்ந்த 50 முன்பள்ளி சிறார்களுக்கான புத்தகப்பை மற்றும் கற்றல் உபகரணங்களும் காக்கையன்குளம் இரணை இலுப்பைக்குளம் , முள்ளிக்குளம் , பாடசாலைகளை சேர்ந்த 24 மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகளும் மேற்படி வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment