குறுந்தனூர் தொல்லியல் தடயங்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருக்க வேண்டியது..
ஏனெனில் கி.மு 7 ஆம் நூற்றாண்டில் கந்தரோடை, திருகோணமலை, ஆகிய இடங்களில் கண்டு எடுக்கப்பட்ட தொல்பொருட்தடயங்கள் தமிழர்களின் வரலாற்றைச் சொல்வதாகவே அமைகின்றது.
அப்படியாயின் குறித்த இந்த இடத்தில் வாழ்ந்த மக்கள் தொகுதியும் தமிழர்களின் வழிவந்த மக்களே. அந்த மக்கள் கூட்டமே பௌத்தத்தையும் தமது நெறிமுறையின் ஒரு அம்சமாக வணங்கி வந்துள்ளார்கள்.
அந்தக் காலங்களில் மகாஞான பௌத்தத்தை தமிழர்களே வளர்ந்தார்கள். ஏனெனில் மகாஞான பௌத்தத்தை தமிழர்களும் தழுவி இருந்தார்கள். இதற்கு வட பகுதிகளில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்ட புத்த சிலைகளில் நெற்றியில் பொட்டு உள்ளதை தொல்லியல் /வரலாற்று ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றார்கள். இதற்கு உதாரணமாக வவுனியாவில் உள்ள மியூசியத்தில் நெற்றியில் பொட்டும், அதன் கை , மற்றும் மார்பு பகுதிகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டு இருப்பதை இன்றும் ஆதாரப்படுத்த முடியும்.
இன்று சிங்கள பத்திரிகைகள் வெளியிட்ட தொல்லியல் தொடர்பான பத்திரிக்கை, அறிக்கைகளில் வெளியிடப்பட்ட யூவா பில்லர்களில் சைவர்கள் வணங்கும் முழுமுதற் கடவுளான சிவனையே குறிக்கின்றது. இச்சிவலிங்க பீடத்தை எண்கோண இலிங்கம் என்றும் அழைப்பர். இதற்கு தாரா இலிங்கம்/பாணப்பட்டை இலிங்கம் என்ற பெயர்களும் உண்டு.
குறுந்தனூர் மலை பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட, கட்டிட இடிபாடுகள், சுடுமண் செங்கற்கற்கள் ஆகியவை கிறிஸ்துவிற்கு முற் பட்ட காலத்திற்கு உரியவை.
கிறிஸ்துவிற்கு முந்திய காலத்திற்கு உட்பட்ட சிவலிங்கங்கள் அனுராதபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் பல்லவ, சோழரின் காலத்திற்கு காலம் இடம்பெற்று வந்ததை வரலாற்று நூல்களில் இருந்து அறியலாம்.பொதுவாக கருங்கல்லில் சிவலிங்கம் செதுக்கும் முறையை அறிமுகம் செய்தவர்கள் பல்லவர்களே. இந்தப் பல்லவர்கள் காலத்தில் சிவலிங்கத்திற்கு பல, பெயர்கள் கூறி எண்கோண, முக்கோண, ஐங்கோண சிவலிங்கங்கள் செதுக்கப்பட்டது. உதாரணமாக தாரா இலிங்கம், எட்டு, பன்னிரண்டு, பதினாறு, கோணங்களில் அமைந்த வையாக செதுக்கப்பட்டது.
தமிழகத்தின் பண்பாட்டியல் அம்சம், இலங்கையில் பரவியது அதிசயத்தக்கதல்ல.
யூபா பில்லர் பற்றி ..
யூபா பில்லர் என்பது சைவ சமயம் கூறும் எட்டுத் திக்கு பாலகர்களையும் அல்லது காவல் கணங்களையும் (தெய்வங்களையும்) உள்ளடக்கிய ஒரு காவல் கல்லாகும். இத்தூண் பல்லவர் காலத்தில் சைவ ஆலயங்களில் இன்றைய கொடித்தம்பத்திற்கு பதிலாக காவல் தூணாக நிறுத்தப்பட்டு இருந்தது.
பல்லவர் காலத்தின் பின்னர் (அண்ணளவாக கி.பி 7 இற்குப் பின்னர்) இந்தக் காவல் கல், டகோபாவாவில்(மகாஞான பௌத்த துறவிகளின் சமாதி) உச்சியில் காவலுக்காக நிறுத்தப்படுகின்ற நீண்ட கற்தூண்களாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.
Balananthini Balasubramaniam
குறுந்தனூர் தொல்லியல் தடயங்கள் பற்றி தமிழர்கள் அறிந்திருக்க வேண்டியது..
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment