மன்னார் மாந்தை மேற்கு பருப்புக் கடந்தான் பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்.
இதன் போது பருப்புக்கடந்தான்-கட்டுக்கரை குள வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்தக் கொண்டிருந்த போது இன்று சனிக்கிழமை காலை 4.30 மணியளவில் குறித்த வீதியில் மறைந்திருந்த காட்டு யானை குறித்த இளைஞர் மீது தாக்கியுள்ளது.
இதன் போது குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிலில் இருந்து பாய்ந்துள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிலை யானை சேதப்படுத்தியுள்ளது.
அயலவர்களின் உதவியுடன் குறித்த இளைஞர் மீட்கப்பட்டார். காயங்களுக்கு உள்ளான குறித்த இளைஞர் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாந்தை மேற்கு பருப்புக் கடந்தான் பகுதியில் காட்டு யானை தாக்கி இளைஞர் காயம்.
Reviewed by Author
on
May 15, 2021
Rating:

No comments:
Post a Comment