திருமண பதிவு குறித்து பொலிஸார் வௌியிட்டுள்ள அறிவிப்பு
மேலும், நாளை நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளை நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்படாது.
எவ்வாறாயினும், திருமணம் ஒன்றை பதிவு செய்துக் கொள்வதற்காக தடை இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் அல்லது வேறு ஒரு இடத்தில் திருமணங்களை பதிவு செய்துக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்காக, திருமண தம்பதி, அவர்களின் பெற்றோர், பதிவாளர் மற்றும் சாட்சியாளர்கள் இருவருக்கு கலந்து கொள்ள முடியும். அவர்களை தவிர்த்து வேறு எவருக்கும் அதில் கலந்து கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்விற்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அவற்றின் இயலளவில் 50 க்கு அதிகரிக்காத அளவிலேயே ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்படும்.
எனினும், இயன்றவரை பொது இடங்களில் நடமாடுவதை தவிர்ந்து கொள்ளுமாறு அரசாங்கம் பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
திருமண பதிவு குறித்து பொலிஸார் வௌியிட்டுள்ள அறிவிப்பு
Reviewed by Author
on
August 16, 2021
Rating:

No comments:
Post a Comment