ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் தலிபான்கள் - யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாக அறிவிப்பு
அமைதியான சர்வதேச உறவுகளிற்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
நாங்கள் எதற்காக முயற்சி செய்தோமோ அதனை அடைந்துவிட்டோம்,எங்கள் நாட்டினதும் மக்களினதும் சுதந்திரமே அது என தெரிவித்துள்ள அவர் நாங்கள் எவரும் வேறு எவரையும் இலக்குவைப்பதற்காக எங்கள் நாட்டை பயன்படுத்த அனுமதிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆயுதங்களுடன் தலிபான் தீவிரவாதிகள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியுள்ளதை தொடர்ந்தும் வெளிநாடுகள் தங்கள் தூதுதரகங்களை சேர்ந்தவர்களை வெளியேற்றும் அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதை தொடர்ந்தும் காபுலில் பதற்ற நிலை காணப்படுகின்றது.
காபுலை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்தில் குவிந்துள்ளனர்
.
.
ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர் தலிபான்கள் - யுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாக அறிவிப்பு
Reviewed by Author
on
August 16, 2021
Rating:

No comments:
Post a Comment