அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொலிஸாரால் பாடசாலை சிறுவர்களுக்கு அன்பளிப்பு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் மற்றும் மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டுள வீர சிங்க தலைமையில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட 100 பாடசாலை சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைக்கப்பட்டுள்ளது

 நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கபட உள்ளமையை கருத்தில் கொண்டு வறுமை கோட்டுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட நூறு மாணவர்களுக்கு அடிப்படை கற்றல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கற்றல் உபகரணங்கள் மேற்படி வழங்கி வைக்கப்பட்டுள்ளது 

 அதே நேரம் கற்றல் செயற்படுகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ள மற்றும் கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதில் கஸ்ரம் உள்ள மாணவர்களுக்கு மேலதிக கற்றல் உபகரணக்களை வழங்குவதற்கான ஏற்பாடும் மன்னார் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தேவையுடைய மாணவர்கள் பொலிஸ் நிலையத்தை தொடர்பு கொள்வதன் ஊடாக கற்றல் உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையம் தெரிவித்துள்ளது





சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மன்னார் பொலிஸாரால் பாடசாலை சிறுவர்களுக்கு அன்பளிப்பு Reviewed by Author on September 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.