அண்மைய செய்திகள்

recent
-

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரு இடங்கள் அடையாளம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதற்கமைய திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் இந்த இடங்கள் தொடர்பாக அறியக்கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

 எனினும் அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களில் இரண்டாயிரத்து 522 பேரின் சடலங்கள் மட்டக்களப்பு – ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஓட்டமாவடி மயானத்தில் மேலும் 300 சடலங்களை புதைப்பதற்கான காணி மாத்திரமே காணப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனாவால் உயிரிழப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரு இடங்கள் அடையாளம்! Reviewed by Author on September 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.