'பொன்னியின் செல்வன்' - நம்பர் 1 இடத்தில் சோழர்கள்
எழுத்தாளர் கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ட்ரைலரை பார்க்கையில் பகை, வஞ்சகம், துரோகம், காதல் உள்ளிட்ட பல எமோஷன்கள் கலந்து சோழர்களின் வாழ்க்கையை பற்றி விரிவாக பேசியிருப்பது போல் தெரிகிறது. பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இந்த ட்ரைலர் தற்போது வரை யூ-ட்யூபில் 3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங் லிஸ்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் ரசிகர்கள் இந்த ட்ரைலரை சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
'பொன்னியின் செல்வன்' - நம்பர் 1 இடத்தில் சோழர்கள்
Reviewed by Author
on
September 07, 2022
Rating:

No comments:
Post a Comment