இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்கள் கௌரவிப்பு.
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (7) மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
-இதன் போது 3 ஆம் இடத்தை பெற்ற ஜெஸ்லின் மற்றும் 4 ஆம் இடத்தைப் பெற்ற ஜான்சன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
-மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெலினால் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மற்றும் மாவட்ட செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு வீரர்களை வாழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்கள் கௌரவிப்பு.
Reviewed by NEWMANNAR
on
April 07, 2023
Rating:

No comments:
Post a Comment