பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டு கொள்ளையில் ரஜினி மகள் வீட்டில் திருடிய கார் ஓட்டுநருக்கு தொடர்பா? - போலீஸ் விசாரணையில் புது தகவல்
சென்னை: சென்னை அபிராமபுரம், 3-வது தெருவில் உள்ள வீட்டில் பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ், மனைவி தர்ஷனாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டு லாக்கரிலிருந்த ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கம், வைர நகைகள் திருடு போனது.இதுகுறித்து, தர்ஷனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
முன்னதாக ரஜினி மகள் ஐஸ்வர்யா வீட்டிலிருந்து 200 பவுன் நகை வரை திருடுபோனது. இது தொடர்பாக வீட்டு வேலை செய்து வந்த ஈஸ்வரி, கார் ஓட்டுநர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்ட வெங்கடேசன் முன்பு விஜய் யேசுதாஸ் வீட்டிலும் வேலை செய்து வந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment