பத்மநாபாவின் 72 வது பிறந்த தினம் மன்னாரில் நினைவு கூறல்.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (E.P.R.L.F) ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 72 வது பிறந்த தினம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (19) வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் நினைவு கூறப்பட்டது.
இந்த நிலையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் மாலை கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர் .குமரேஸ் தலைமையில் ஸ்தாபக தலைவர் பத்மநாபாவின் 72 வது பிறந்த தினம் நினைவு கூறப்பட்டது.
-இதன் போது கட்சியின் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியுடன் பாடசாலை மாணவர்கள் 65 பேருக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் குடை என்பன வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பத்மநாபாவின் 72 வது பிறந்த தினம் மன்னாரில் நினைவு கூறல்.
Reviewed by Author
on
November 19, 2023
Rating:

No comments:
Post a Comment