அண்மைய செய்திகள்

recent
-

வட்டுக்கோட்டை பொலிஸார் சித்திரவதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் கூறிய வீடியோ ஆதாரம்!

 வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை மூன்று நான்கு மணித்தியாலங்கள் கட்டி வைத்து தாக்கி சித்திரவதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் வைத்தியசாலையில் தெரிவித்த வீடியோ ஆதாரங்கள் தற்பொழுது உறவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.


களவு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில்  தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மீது உறவினர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸ் அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தமது மகன் சந்தேகத்தின் பேரில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு 4 நாட்களுக்கு மேல் தடுத்து வைத்து விசாரணை செய்த பின்னரே நீதிமன்றில் முற் படுத்தியதாக பெற்றோர் குற்றஞ் சாட்டியுள்ளனர்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்ற உத்தரவில்  தடுப்புக்காவலில்    வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இன்றைய தினம் (19)  உயிரிழந்தார்.

சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே உயிரிழந்தார்.

சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளிட்ட இருவர் கடந்த வாரம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சந்தேக நபர்கள் இருவரும் நான்கு நாட்களாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படவில்லை, விடுவிக்கப் படவும் இல்லை என்பதால் உறவினர்கள் அச்சமடைந்தனர்.

தாயார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். அதனால் சந்தேக நபர்கள் கடந்த 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற் படுத்தப்பட்டனர்.

பொலிஸாரின் ஆட்சேபனை அடுத்து சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டனர்.

இருவரும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறைக்கவாலரின் காவலுடன் உயிரிந்த சந்தேக நபர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனையின் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





வட்டுக்கோட்டை பொலிஸார் சித்திரவதை செய்ததாக உயிரிழந்த இளைஞன் கூறிய வீடியோ ஆதாரம்! Reviewed by Author on November 19, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.