100 வீத சித்தியடைந்து சாதனை நிலைநாட்டிய கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட கரிப்பட்ட முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து 2022 ம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய 10 மாணவர்களும் சித்தியடைந்து பாட்சாலை நூறு வீத சித்தியை பதிவு செய்துள்ளது
முல்லைதீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு கிராம அலுவலர் பிரிவில் ஒட்டுசுட்டான் மாங்குளம் பிரதான வீதியில் அமைந்திருக்கின்ற இந்த கரிப்பட்டமுறிப்பு அரசியல் தமிழ் கலவன் பாடசாலையானது அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் இயங்கி வருகின்ற ஒரு பாடசாலை ஆகும்.
இங்கு மாணவர்களுக்கான உரிய போக்குவரத்து வசதிகள் இன்றி பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்
இதேபோன்று மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆசிரியர்களும் இந்த பாடசாலைக்கு மிகவும் நெருக்கடியான போக்குவரத்து சேவைகளுக்கு மத்தியில் வருகை வந்து அவர்களுக்கான கற்ப்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இவ்வாறான நிலையில் 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோன்றிய 10 மாணவர்களின் 10 மாணவர்களும் 100 வீத சித்தியை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்
அந்தவகையில்
குகநேசன் யாழின்பன் 7A 2 B
உதயந்தி கோபிதன் 6A 2C S விக்கினேஸ்வரன் அபிராமி 5A 3B
தேவராஜ் வினோதா 5A 2B C S
பத்மரஞ்சன் திருசாளினி 3A 3B 3C
செல்வராசா பவிது 3A 4B C S
தயானந்தசெல்வன் தனோஜா2A 2B 3C 2S சுதாகரன் சுகந்தியா 2A 3B 3C S பத்மரஞ்சன் மதுமிலன் 2A B 5C S
பத்மநாதன் நிருபா A 2B 4C 2S ஆகிய பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர்
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் தங்களுடைய வெற்றிக்கு காரணமாக அமைந்த பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு விசேடமாக கோண்டாவில் நலன்புரிச் சங்கத்தின் நிதி அனுசரணையில் துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பின் ஊடாக கடந்த ஐந்து வருடங்களாக தமக்கான கணிதம், விஞ்ஞானம்,ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான விசேட வகுப்புகள் நடத்தப்பட்டதாகவும் இதன் ஆசிரியர்கள் இதனை ஒழுங்குபடுத்தியவர்கள் நிதி வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்
100 வீத சித்தியடைந்து சாதனை நிலைநாட்டிய கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
Reviewed by Author
on
December 03, 2023
Rating:

No comments:
Post a Comment