முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்து சமய அறநெறிப் பாடலை ஆசிரியர்களுக்கான அடிப்படைத் தலைமைத்துவப் பயிற்சி நேற்றய தினம் (02.12.2023) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர். அ. உமாமகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி நெறியில் முல்லைத்தீவு மாவட்டதில் உள்ள அறநெறிப் பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் நூறு அறநெறி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.சிவானந்தம் மோகனராசா அவர்கள் வரவேற்ப்புரையினை நிகழ்த்தினார்.
இந் நிகழ்வில் கல்வி அமைச்சின் ஓய்வு நிலை மேலதிக செயலாளர் உடுவை எஸ்.தில்லைநடராசா ,மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்) சி. குணபாலன், பிரதம கணக்காளர் ம. செல்வரட்ணம் மற்றும் சைவப்புலவர், பாலன் சுதாகரன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந் நிகழ்வில் கலாசார உத்தியோகத்தர்கள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வின் இறுதியில் பங்குபற்றிய ஆசிரியர்களிற்கு சான்றிதழ்களும் தலைமைத்துவத்துடன் தொடர்புடைய நூல்களும் வழங்கிவைக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடலை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி
Reviewed by Author
on
December 03, 2023
Rating:

No comments:
Post a Comment