பெண் ஒருவரை அத்துமீறி கட்டியணைத்த நபர் கைது
பெண் ஒருவரை அத்துமீறி கட்டியணைத்த நபர் கைது
பெண் ஒருவரை அத்துமீறி கட்டியணைத்த சந்தேகநபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பகுதியை சேர்ந்த 49 வயதுடைய சந்தேகநபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்முனை பொதுச்சந்தையில் நேற்று முற்பகல் வியாபார நடவடிக்கையில் குறித்த பெண் ஈடுபட்டு கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் அவரை அத்துமீறி கட்டியணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, சிறுவர் பெண்கள் பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
பெண் ஒருவரை அத்துமீறி கட்டியணைத்த நபர் கைது
Reviewed by வன்னி
on
December 23, 2023
Rating:

No comments:
Post a Comment