மன்னாரில் இரண்டு சுய தொழில் குழுக்களுக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மன்னாரில் இரண்டு சுய தொழில் குழுக்களுக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மன்னார் பிரதேசசெயலாளர் பிரிவில் இயங்கி வருகின்ற இரண்டு சுயதொழில் குழுக்களுக்கான சுய தொழிலை மேம்படுத்துவதற்கான பெறுமதி வாய்ந்த தொழில் சார் உபகரணங்கள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (22) மாலை மன்னார் பிரதேசசெயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் குறித்த தொழில் சார் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்ப அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் குழுக்களாக செயல்பட்டுக் கொண்டிருந்த பட்டித்தோட்டம் கிராமத்தில் உள்ள குழு ஒன்றுக்கு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இழப்பீட்டிற்கான அலுவலகத்தினால் மாவட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகர் எம்.சுதாகர் ஊடாக பனையோலை கைப்பணிகளை வாழ்வாதாரமாக முன்னெடுக்கும் குழு அங்கத்தவர்களுக்கு சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் மன்னார் பெரிய கமம் கிராமத்தில் தும்புத்தடி மற்றும் விளக்குமாறு உள்ளிட்ட கைவினை பொருட்கள் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் குறைந்த வருமானம் பெறும் குழுக்களுக்கு அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக சுமார் 3 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தும்புத்தடி சீவுகின்ற இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த சுய தொழில் உபகரணங்கள் இழப்பீட்டிற்கான அலுவலகத்தின் பணியாளர்கள் மற்றும் மாவட்ட இழப்பீடுகளுக்கான அலுவலகர் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.
மன்னாரில் இரண்டு சுய தொழில் குழுக்களுக்கு பெறுமதி வாய்ந்த சுய தொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
Reviewed by வன்னி
on
December 23, 2023
Rating:

No comments:
Post a Comment