குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா : மதரஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது
சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் மரணத்தில் சந்தேகம் வெளியிட்டு நேற்று (05) இரவு பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு குழப்பத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாப் எனும் மாணவனே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ஜனாஸாவாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருவதுடன் குறித்த மதரஸாவின் நிர்வாகியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் என்றும் அந்த மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே நிறைய பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். களத்திற்கு வருகைதந்த சாய்ந்தமருது பொலிஸார் மதராஸாவின் மான்பை பேணும்விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும், நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
குர்ஆன் மதரஸாவில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சிறுவனின் ஜனாஸா : மதரஸாவின் நிர்வாகி பொலிஸாரால் கைது
Reviewed by Author
on
December 06, 2023
Rating:

No comments:
Post a Comment