ஆயுதக் குழு மோதலில் ஈடுபாடு' பணியில் இருந்த இராணுவ சிப்பாய் கைது
ஆயுதக் குழு மோதலில் ஈடுபாடு' பணியில் இருந்த இராணுவ சிப்பாய் கைது
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவரிடம் போதைப் பொருளான கிறிஸ்டன் மெத்தாப்படமைன் (crystal methamphetamine ) இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21ஆம் திகதியன்று கைது செய்யப்பட்ட 37 வயதான லான்ஸ் கோப்ரல் கன்கனமகே ரசங்க லலிந்து குமார, ஜனவரி 28ஆம் திகதி வரை கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீன் வியாபாரி ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பிலும் ரனமல்லி என்ற விஜித் மகேந்திரவின் கொலை தொடர்பிலுமான சந்தேகநபரை கைது செய்வவதற்காக பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக இலங்கை பொலிசாரின் விசேடட அதிரடைப் படையின் கமாண்டர் வருண ஜயசுந்தர கூறுகிறார்.
குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுடன் நேரடியாக தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்புபட்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் ரசங்க லலிந்து குமார கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் 18 கிராம் மற்றும் 470 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் காணப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment