அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் கல்முனை பஹ்ரியாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு

 பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் கல்முனை பஹ்ரியாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு




திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களினால் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/அல்- பஹ்ரியா மகா வித்தியாலயத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.


பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம் பைசால் தலைமையில் விளையாட்டு அபிவிருத்தி மேம்பாடு, உடற்கட்டமைப்பு வளர்ச்சித் திறன் அபிவிருத்தி போன்ற நோக்கங்களுக்காக உடல் வலுவூட்டல் உபகரணங்கள் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்ட இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விளையாட்டு உபகரணங்களை மாணவர்களிடம் வழங்கி வைத்தார்


இந் நிகழ்வில் பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் யூ.எல். சிபான், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான எம்.ஏ.எம் ரியால், ஏ.டபிள்யூ அசாட்கான் மற்றும் பிரிலியண்ட் விளையாட்டுக் கழக தலைவரும், கல்முனை 12ம் வட்டார அமைப்பாளருமான எம்.எஸ்.எம் பழீல், பிரிலியண்ட் விளையாட்டுக் கழக செயலாளர் எஸ்.டி.எம் பஸ்வாக், பழைய மாணவர் சங்க செயலாளர் எஸ்.எம் ஹாஜா, பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர் ஏ.எல்.எம் நபீர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்






பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸினால் கல்முனை பஹ்ரியாவுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு Reviewed by வன்னி on February 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.