அண்மைய செய்திகள்

recent
-

புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் கிராம மக்கள். யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை.

 புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் கிராம மக்கள். யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை.



புதுக்குடியிருப்பில் காட்டு யானைகளின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மந்துவில் , மல்லிகைத்தீவு போன்ற கிராமங்களில் கடந்த இரண்டு , மூன்று தினங்களாக தொடர்ச்சியாக விவசாய காணி, வயல்காணி, தோட்ட காணிகளுக்குள் கூட்டமாக புகுந்த யானை வாழ்வாதார பயிர்களான நெல், தென்னம்பிள்ளை, பயிற்றை, வெண்டி, கச்சான் என்பவற்றை மிதித்து நாசமாக்கியுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.


யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேறிய இம்மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயம் மற்றும் தோட்டச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கிராமத்தில் யானையின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதனால் தமது வாழ்வாதாரத்தை இழக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இப் பிரச்சினை காரணமாக கிராமத்திற்குள் யானை உள்நுளையாதவாறு யானை வேலியினை அமைத்து தருமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















புதுக்குடியிருப்பில் யானைகளின் தாக்கத்தினால் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையில் கிராம மக்கள். யானை வேலி அமைத்து தருமாறு கோரிக்கை. Reviewed by வன்னி on February 09, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.