அண்மைய செய்திகள்

recent
-

கடைகளில் உணவுகள் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

 சமகாலத்தில் மக்கள் மத்தியில் டைபாய்டு பாக்டீரியா பரவும் அபாயம் இருப்பதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.


டைபாய்டு பாக்டீரியா மலக் கழிவுகளால் உருவாகிறது மற்றும் அது பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பரவுகிறது.


வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளி இடங்களில் உண்பவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.


உணவு மற்றும் பானங்கள்

இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, ​​அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது.


கடைகளில் உணவு உட்கொள்வோருக்கு அதிர்ச்சித் தகவல் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Healthy Food For Sri Lankan Homemade Food


எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.



சுகாதார பிரிவினர்

இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், மெதுவான இதயத்துடிப்பு, சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். 


இதேவேளை, டைபாய்டு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் தொடர்புடைய தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்.



கடைகளில் உணவுகள் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை Reviewed by Author on May 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.