பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை உயிருடன் மீட்பு.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (17) காலை உயிருடன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
யானை ஒன்று சுகயீனமுற்ற நிலையில் காணப்பட்டதை அப்பகுதி மக்கள் அவதானித்த நிலையில் உடனடியாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மிருக வைத்திய அதிகாரி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சுகயீனமுற்று காணப்பட்ட யானையை பார்வையிட்டு யானைக்கு உரிய சிகிச்சை வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பள்ளமடு வயல் பகுதியில் சுகயீனமுற்ற நிலையில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க யானை உயிருடன் மீட்பு.
 
        Reviewed by Author
        on 
        
May 17, 2024
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
May 17, 2024
 
        Rating: 


.jpeg)

No comments:
Post a Comment