சிற்றுண்டிக்குள் கம்பி துண்டு
யாழ்ப்பாணம், மருதனார்மடம் சந்தியில் உள்ள வெதுப்பகத்தில் வாங்கிய சிற்றுண்டிக்குள் சுமார் 4 இஞ்சி அளவிலான கம்பி துண்டு ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை உறவினர் வீட்டுக்கு கொண்டு செல்வதற்காக குறித்த வெதுப்பகத்தில் ஒருவர் 80 ரூபா விதம் 10 சிற்றுண்டி வாங்கிச் சென்றுள்ளார். உறவினர்களின் வீட்டில் குறித்த சிற்றுண்டியை உண்பதற்காக பரிமாறியபோது, நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஊட்டுவதற்காக தாய் சிற்றுண்டியை பிரித்த போதே சிற்றுண்டிக்குள் கம்பி துண்டு ஒன்று இருந்தது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை குறித்த வெதுப்பகத்தில் சிற்றுண்டியை கொள்ளவனவு செய்த நபர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் சுகாதார அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
Reviewed by Author
on
May 25, 2024
Rating:


No comments:
Post a Comment