யாழில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் புத்தூரில் உள்ள ஆலய சூழலில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
திருநெல்வேலி கலாசாலை வீதியில் வசிக்கும் 61 வயதான ஓய்வுபெற்ற பல்கலைக்கழக உத்தியோகத்தரான முத்து சிவலிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் திங்கட்கிழமை (6) மாலை இடம்பெற்றது.
காயமடைந்தவர் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மரம் வெட்டிக் கொண்டு இருந்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு!
Reviewed by Author
on
May 07, 2024
Rating:
No comments:
Post a Comment