நல்லூர் தேர்த் திருவிழாவிற்கு சென்றோர் கவனத்துக்கு: யாழ். மாநகரசபை ஆணையாளர் வேண்டுகோள்
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின்போது பக்தர்களால் தவறவிடப்பட்ட, இன்னமும் உரிமை கோரப்படாத பொருட்கள் யாழ். மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கை சங்கிலி - 1, மோதிரம் -1, பணப்பைகள் - 9, கைக்கடிகாரங்கள் - 18, தேசிய அடையாள அட்டைகள் - 4, சாரதி அனுமதிப்பத்திரம் - 4, வங்கி அட்டைகள் - 4, திறப்புகள் - 39 ஆகிய பொருட்களே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டன.
இவற்றை உரிமையாளர்கள் உரிய ஆதாரங்களை காட்டி மாநகர சபை நிர்வாகக் கிளையில் அலுவலக நேரத்தில் புதன்கிழமை (11) தொடக்கம் அக்டோபர் 10ஆம் திகதி வியாழக்கிழமை வரை பெற்றுக் கொள்ளலாம் என்று யாழ். மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் தேர்த் திருவிழாவிற்கு சென்றோர் கவனத்துக்கு: யாழ். மாநகரசபை ஆணையாளர் வேண்டுகோள்
Reviewed by Author
on
September 11, 2024
Rating:

No comments:
Post a Comment