இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதை பொருள் கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .
இதன் சர்வதேச மதிப்பு 29 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
தூத்துக்குடி கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு தொடர்ச்சியாக கஞ்சா, பீடி இலைகள், களைக்கொல்லி மருந்து, வலி நிவாரண மாத்திரைகள் தொடர்ச்சியாக கடத்தப்பட்டு வருகிறது.
கடத்தலை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் கியூ பிரிவு போலீசார் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று (2) தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் 'சாரஸ்' என்ற அதிநவீன போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து கியூ பிரிவு ஆய்வாளர் விஜய் அனிதா தலைமையில் போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு இருந்த படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 58 கிலோ சாரஸ் என்ற அதிபோதை பொருள் கியூ பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச மதிப்பு படி 29 கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக தூத்துக்குடி சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் உற்பட 3 பேரை பிடித்து கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கியூ பிரிவு போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சாவை உருக்கி ஒரு கிலோ சாரஸ் ஆக உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அண்மைக்காலமாக தூத்துக்குடியில் இருந்து போதைப் பொருட்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது வழக்கமாக நடந்து கொண்டிருந்தாலும் தற்போதைய இந்த கடத்தல் மிகப்பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.
இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 29 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.
Reviewed by Author
on
September 02, 2024
Rating:

No comments:
Post a Comment