கண்டியில் பிரான்ஸ் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் ; சந்தேக நபர் கைது
கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் அறையில் வைத்து பிரான்ஸ் நாட்டுப் பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.
கண்டி, குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
30 வயதுடைய பிரான்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் சுற்றுலாவுக்காக இலங்கைக்கு வந்துள்ள நிலையில், கண்டி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் தங்கியிருந்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் அந்த ஹோட்டல் அறைக்கு அத்துமீறி நுழைந்து பிரான்ஸ் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர், பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment