அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை குறித்து தெளிவு படுத்தல்.

 தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களிற்கான முன்னேற்ற மீளாய்வு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட 01/2025 ஆம் இலக்க அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை மற்றும் வழிகாட்டல்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (5) இடம் பெற்றது.




 மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்டச் செயலக  மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.


இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலாளரினால் கடந்த கால வெள்ளத்தின் போது  பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் குறித்து வழங்கப்பட்ட ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு மிக்க சேவைகளுக்காக நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.


மேலும் அனர்த்த காலங்களின் போது நிவாரணம் வழங்குவதற்காக 01/2025 ஆம் திகதி சுற்றறிக்கைக்கு மற்றும் வழிகாட்டல் தொடர்பாக  சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.




மன்னார் மாவட்டச் செயலகத்தில் அனர்த்த நிவாரண சேவைகள் சுற்றறிக்கை குறித்து தெளிவு படுத்தல். Reviewed by Author on February 05, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.