மன்னார் விடத்தல் தீவு குளப் பகுதியில் இருந்து 28 கிலோ கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விடத்தல் தீவு குளப் பகுதியில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை இன்று செவ்வாய்க்கிழமை(4) காலை அடம்பன் பொலிஸார் மீட்டுள்ளனர்.
-மன்னார்- அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(4) காலை விடத்தல் தீவு குளப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட பொலிஸார் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 13 பொதிகளை கொண்ட கேரள கஞ்சா பொதிகளை மீட்டனர்.
-சுமார் 28 கிலோ எடை கொண்ட கேரள கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.இதன் சந்தை பெறுமதி 42 லட்சம் என தெரிய வந்துள்ளது.
எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
Reviewed by Author
on
February 04, 2025
Rating:


No comments:
Post a Comment