ஒவ்வொரு 10 மாணவர்களில் 6 பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு
நாட்டில் 60 சதவீத பாடசாலை மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
உயர் தரங்களில் கற்கும் மாணவர்களில் 24 சதவீத மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.
மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக இலங்கை சிறுவர் மற்றும் இளம் பருவத்தினர் தொடர்பான மனநல வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச தெரிவித்தார்.
"கல்வியின் கடுமையான அழுத்தம், வீட்டில் பெற்றோருடனான பிரச்சினைகள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பிள்ளைகளுக்கு ஏற்படும் உடல் ரீதியான அழுத்தம் ஆகியவை இந்த மன அழுத்தத்திற்குக் காரணங்கள் என்பதை இந்த மனநல சோதனை கண்டறிந்துள்ளது."
"இலங்கையின் மக்கள் தொகையில் 19% பேர் மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர் என்பதை இது காட்டுகிறது." என்றார்.
இன்றைய (10) உலக மனநல தினத்தை முன்னிட்டு தனது கருத்துக்களை வெளிப்படுத்தும் போது பேராசிரியர் மியுரு சந்திரதாச இவ்வாறு கூறினார்
ஒவ்வொரு 10 மாணவர்களில் 6 பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு
Reviewed by Vijithan
on
October 10, 2025
Rating:

No comments:
Post a Comment