மன்னார் அடம்பன் கிராமத்தில் பாரம்பரிய நடன நிகழ்வுகளுடன் சிறப்பாக இடம்பெற்ற சிரேஷ்ட பிரஜைகள் தினம் .
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் சிரேஷ்ட முதியோர் சங்கம் ஏற்பாடு செய்த முதியோர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (10) காலை அடம்பன் முதியோர் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது.
பாரம்பரிய நடன,இசை ,வாத்திய நிகழ்வுடன் குறித்த நிகழ்வு ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கே.அரவிந்தராஜ் ,சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் கௌரவ விருந்தினர்களாக அடம்பன் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர்,இலங்கை வங்கி முகாமையாளர், அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 60 வயதிற்கு மேற்பட்ட நீண்ட காலமாக முதியோர் சங்கத் துடன் இணைந்து செயல்பட்ட மூன்று சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் முதியோர் சங்க உறுப்பினர்கள், மாணவர்கள் பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment