அண்மைய செய்திகள்

recent
-

பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய 75வது ஆண்டு பவள விழா திருப்பலி19.10.2025

 மட்டக்களப்பு மறைமாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள பெரியகல்லாறு புனித அருளானந்தர்  ஆலய 75வது பவள விழா  திருப்பலியானது  19.10.2025  ஞாயிற்றுக்கிழமை  காலை 7:30 மணிக்கு பங்குத்தந்தை அருட்பணி  அன்ரன் டெறன்ஸ் றாகல் அடிகளாரின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.


கடந்த 9 நாட்கள் மாலை வழிபாடுகள் இறைமக்களை தயார்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளை மையப்படுத்தியதாக இறைமக்களுக்கு அருட்பணியாளர்களினால்  சிந்தனைகள் வழங்கப்பட்டது.


அதனை தொடர்ந்து  சனிக்கிழமை மாலை வேஸ்பர் நற்கருணை ஆராதனை வழிபாடும்  இடம் பெற்றது.


இன்றைய திருவிழா திருப்பலியினை  மட்டக்களப்பு மறைமாவட்ட. அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி P. அன்ரன் ரஞ்சித் ஆண்டகை  

தலைமைதாங்கி அருட்தந்தை  சுகந்தன், அருட்தந்தை ஹர்சதன் ரிச்சர்ட்சன், அருட்தந்தை டிலுக்சன் ஸ்பெக்,  பங்குத்தந்தை அன்ரன் டெறன்ஸ் றாகல் அடிகளாரும் இனைந்து திருப்பலியினை ஒப்புக்கொடுத்து இறைவேண்டுதல் செய்ததுடன் அருட்சகோதரர்களும், அருட்சகோதரிகளும், இறைமக்களும் கலந்து கொண்டதோடு


திருப்பலி நிறைவில் புனித அருளானந்தர் திருச்சுருப பவனி ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டதுடன்  புனித அருளானந்தர் புகழ்பாக்கள் இசைக்கப்பட்டு கவிகள் இசைக்கப்பட்டு இறுதி செபத்துடன் புனித அருளானந்தர் திருச்சுருப ஆசீரை  பங்குத்தந்தை அருட்பணி  அன்ரன் டெறன்ஸ் றாகல் அடிகளார் இறைமக்களுக்கு வழங்கியதோடு கொடியிரக்கத்துடன் திருவிழா நிறைவு பெற்றது. 


அத்தோடு பங்குத்தந்தை அவர்களினாலும்,   திருவிழா சிறப்பாக அமைய சகல வழிகளிலும் உதவிகளை மேற்கொண்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்திருந்ததோடு, திருவிழா வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்த
















பெரியகல்லாறு புனித அருளானந்தர் ஆலய 75வது ஆண்டு பவள விழா திருப்பலி19.10.2025 Reviewed by Vijithan on October 19, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.