கிளிநொச்சியில் ஆண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை..!
கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
அக்கராயன்குளம் - ஈச்சங்குளம் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த நபர், வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆறுபேர் கொண்ட குழுவே வாளால் வெட்டி மேற்படி கொலை சம்பவத்தை
அரங்கேற்றியுள்ளார்கள்.
மேலும், உயிரிழந்த நபர் அக்கராயன் குளத்தை சேர்ந்த 22 வயதை உடைய கௌரிராஜா கஜன் என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சியில் ஆண் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை..!
Reviewed by Vijithan
on
October 20, 2025
Rating:

No comments:
Post a Comment