அண்மைய செய்திகள்

recent
-

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம்

 ஹோங்கொங் சர்வதேச விமான நிலையத்தில் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து விலகி, அருகிலுள்ள வாகனத்தில் மோதி கடலில் விழுந்துள்ளது. 


விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

துருக்கிய சரக்கு விமான நிறுவனமான Air ACTக்கு சொந்தமான போயிங் 747-481, எமிரேட்ஸ் EK9788 விமானமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. 

விமான நிலைய வாகனத்தில் இருந்த இரண்டு பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். 

இருப்பினும், விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் உயிர் பிழைத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

பாதிக்கப்பட்ட ஓடுபாதையை மூட விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.



ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த சரக்கு விமானம் Reviewed by Vijithan on October 20, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.