தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வு ஹட்டனில்
புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், நுவரெலியா மாவட்ட செயலகம் மற்றும் நோர்வூட் பிரதேச செயலகம் ஆகியன ஏற்பாட்டில் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய தீபாவளி பண்டிகை நிகழ்வுகள் இன்று (19) ஹட்டனில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்ட அதிதிகள் ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஹட்டன் மல்லியப்பு சந்திவரை பேரணி ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்.
பின்னர் அங்குள்ள தனியார் மண்டபம் ஒன்றில் தேசிய தீபாவளி தின நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கோலாட்டம், மழையகத்தின் பாரம்பரிய கலையான காமன் கூத்து, அருச்சுனதவசு போன்ற வரலாற்றை பிரதிபிலிக்க கூடிய பல்வேறு கலை நிகழ்வுகளும் இன்றைய பேரணியை அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment