மன்னார் நகர சபையின் 5 ஆவது அமர்வு-பல்வேறு விடையங்கள் குறித்து ஆராய்வு
மன்னார் நகர சபையின் 5 வது கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (22) காலை 10 மணியளவில் நகர சபையின் சபா மண்டபத்தில் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது ஏற்கனவே உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக கூட்டம் இடம் பெற்றது.
இதன்போது கடந்த கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு அங்கிகரிக்கப்பட்டது.
தொடர்ந்தும் மன்னார் நகர சபையின் கடந்த மாத செலவினங்கள் சபை உறுப்பினர்களால் அங்கிகரிக்கப்பட்டது. மேலும் பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு,நகர சபையின் சொத்துக்களை 2026 ஆம் ஆண்டு குத்தகைக்கு வழங்குவதற்கான அங்கிகாரம், உள்ளிட்ட பல்வேறு விடையங்கள் குறித்து ஆராயப்பட்டதோடு சபை உறுப்பினர்களின் பூரண ஒத்துழைப்போடு அங்கிகாரம் வழங்கப்பட்டது.
இதேவேளை மன்னார் நகர சபையினால் வட்டார ரீதியாக முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களுக்கு,குறித்த வங்டாரங்களை பிரதிநிதித்துவ படுத்துகின்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தி,அவர்களின் பங்குபற்றுதலுடன் வேளைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நகர சபை உறுப்பினர் அன்ரனி டேவிட்சன் சபையில் தெரிவித்தார்.
பல்வேறு வட்டாரங்களில் குறித்த வட்டார உறுப்பினர்களுக்கு தெரியப் படுத்தப் படாமல் வேளைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,இதனால் பிரச்சனைகள் நிகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறித்த சபை அமர்வில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment