வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவின், பொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில், 20ஆம் கட்டை பகுதிக்கு அருகில் உள்ள தொலைபேசி கம்பம் ஒன்றின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது, மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் 4 தோட்டாக்களும் மற்றும் வெளிநாட்டுத் தயாரிப்பான ரிவோல்வர் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று (08) அதிகாலை வேளையில், வலான மத்திய ஊழல் ஒழிப்புத் தாக்குதல் பிரிவின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த துப்பாக்கிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக வாழைச்சேனைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு
Reviewed by Vijithan
on
December 08, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 08, 2025
Rating:


No comments:
Post a Comment