அண்மைய செய்திகள்

recent
-

தமிழ்நாட்டில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழ் அகதிஒருவர் பலி!

சென்னையினை அடுத்து கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே இடம்பெற்ற வீதி விபத்தில் கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழ் அகதிகள் முகாமை சேர்ந்த சுதர்சன் என்பவர் உயிரிழந்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமை சேர்ந்த பெரியசாமி மகன் சுதர்சன் என்கிற ரோஷன். இவரும் அதே முகாமை சேர்ந்த சுப்பிரமணி மகன் சாந்தகுமார் (30) என்பவரும் வேலை காரணமாக சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதிக்கு சென்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை அருகே பனப்பாக்கம் பகுதியில் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முகாம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்களது பைக்கின் மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்திருந்த சுதர்சன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மோட்டார் சைக்கிள் செலுத்திச் சென்ற சாந்தகுமார் பலத்த காயத்துடன் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கவரப்பேட்டை பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இடம்பெற்ற விபத்தில் ஈழத்தமிழ் அகதிஒருவர் பலி! Reviewed by Admin on August 03, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.