அண்மைய செய்திகள்

recent
-

தமிழகத்தில் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறைவாசிகளல்ல-சென்னை மேல் நீதிமன்றம்!

முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் சிறைவாசிகள் இல்லை என்றும் அடிப்படை உரிமைகளைப்பெற அவர்களுக்கும் உரிமை உள்ளது என்றும் சென்னை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பூந்தமல்லி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாமை மூடிவிட தமிழக அரசு தீர்மானித்துள்ள நிலையில் அங்கிருப்பவர்களை வேறு சிறப்பு முகாம்களுக்கு மாற்றுவது தொடர்பில் அரசு ஆராய்ந்து வருகிறது.


 இந்நிலையில் சுரேஷ்குமார் என்பவர் சென்னை மேல்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளதால் மற்றவர்களின் உதவி இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்றும் கும்மிடிப்பூண்டி அல்லது புழல் முகாமுக்கு தன்னை மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

 இம்மனுவை நேற்றுமுன்தினம் விசாரித்த நீதிபதி சசிதரன் பூந்தமல்லி சிறப்பு முகாமை மூடுவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. அந்த இடத்தில் சைதை கிளை சிறையில் உள்ள சிறுவர்களை தங்க வைக்க அரசு எண்ணியுள்ளது. முகாமில் உள்ளவர்கள் சிறைவாசிகள் அல்ல. மாறாக பல்வேறு காரணங்களுக்காக இவர்களை அரசு முகாம்களில் வைத்துள்ளது. அடிப்படை உரிமைகளைப்பெற இவர்களுக்கு உரிமை உள்ளது.

 எனவே தங்களை கும்மிடிப்பூண்டி முகாமுக்கு மாற்றக்கோரி அரசிடம் இவர்கள் மனு அளிக்கலாம். அவ்வாறு அளிக்கும்பட்சத்தில் அதனை அரசு பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு முடிவெடுக்கும் வரை முகாமில் இருப்பவர்களை அங்கு தங்கியிருக்க அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
தமிழகத்தில் முகாம்களில் உள்ள ஈழத்தமிழர்கள் சிறைவாசிகளல்ல-சென்னை மேல் நீதிமன்றம்! Reviewed by Admin on September 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.