அண்மைய செய்திகள்

recent
-

மனித உரிமையை மீறும் இலங்கையில் மாநாடு வேண்டாம்; கோரிக்கை விடுக்கிறது சர்வதேச மன்னிப்பு சபை

மனித உரிமை மீறல் தொடர்பிலான சர்ச்சைகள் இடம்பெறும் நாடான இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் அமர்வை நடத்தக்கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு நிகழவுள்ள நிலையில் இந்தக் கோரிக்கையை சர்வதேச மன்னிப்பு சபை விடுத்துள்ளது. பொதுநலவாய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை உள்ளடக்கிய அமைச்சர் மட்ட நடவடிக்கைக்குழுவினர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கமலேஸ் சர்மா ஆகியோருக்கு இடையில் இன்று நியூயோர்க்கில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.


 இந்தநிலையில் பொதுநலவாய அமைப்பு தமது மனித உரிமைகள் தொடர்பான கொள்கையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் பிரதி பணிப்பாளர் பொலி ட்ரஸ்கொட் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் போது இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர்க்குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டனர். 

எனினும் இது தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் இடம்தர மறுக்கிறது. இந்தநிலையில் இலங்கைக்கு விஜயம் செய்து திரும்பிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கை சர்வதிகாரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக குற்றம் சுமத்தியுள்ளமையையும் சர்வதேச மன்னிப்பு சபையின் ஆசிய பசுபிக் உதவி பணிப்பாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமையை மீறும் இலங்கையில் மாநாடு வேண்டாம்; கோரிக்கை விடுக்கிறது சர்வதேச மன்னிப்பு சபை Reviewed by Admin on September 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.